• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய இன்றே கடைசி…

Byகாயத்ரி

Jun 16, 2022

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான நீட்தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மே 20ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் ஏதாவது திருத்தம் இருந்தால் இன்று இரவுக்குள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர் . இந்த நீட்தேர்வு ஆயுதப்படை, நர்சிங் கல்லூரிகளில் B.Sc, நர்சிங் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.