• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்

ByA.Tamilselvan

Jun 8, 2022

கொரோனா காலகட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் 11-ஆம் வகுப்பை சேர்ந்த 417 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் திருமணமான மாணவிகளின் விவரங்களை சேகரித்து, அவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க மாணவிகளை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வந்து படிப்பை தொடர்வதற்கு கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு அதிகம் திருமணம் நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசுக்கும், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளனர்.