• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தன்னைத் தானே திருமணம் செய்யப்போகும் இந்திய இளம்பெண்…

Byகாயத்ரி

Jun 2, 2022

வெளிநாடுகளில் ஓரே பாலினத்தை சேர்நதவர்கள் திருமணம் செய்துக்கொள்வது, தன்னைத்தானே திருமணம் செய்துக்கொள்வது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறும். இது சோஷியல் மீடியாவிலும் பரவும். அந்த வகையில் இந்தியாவில் தற்போது ஒரு சில இடங்களில் இரு பெண்கள் திருமணம் செய்தும் வருகின்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு இரு இளம்பெண்கள் திருமணம் செய்தனர்.

இந்த நிலையில், இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள உள்ளார். குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து(24 ) என்ற இளம்பெண், எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப் போலவே ஜூன் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய திருமணத்துக்கும் தயாராகி வருகிறார். திருமணத்துக்கான பிரேத்யேக ஆடை மற்றும் அனைத்து சம்பிராதாயங்களும் இவருடைய திருமணத்தில் நடைபெறவுள்ளது. திருமண அழைப்பால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். அதாவது, இந்த திருமணத்தில் மணமகன் மட்டுமே இல்லையே தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. மாப்பிள்ளை இல்லலாமல் தனியாக திருமணமான என்பது தான் அவர்களின் குழப்பம்.

இதை பற்றி ஷாமா பிந்து கூறியது, சிறு வயதில் இருந்தே திருமணம் மீது ஆர்வம் இல்லை. திருமணம் எனும் பாரம்பரியம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன். அதனால், என்னை நானே மணந்துகொள்ள முடிவு செய்தேன். இது சோலோகேமி என அழைக்கப்படுகிறது. ஒரு வெப்சீரிஸில் நடிகை ஒருவர் , எல்லா பெண்களும் மணமகளாக விரும்புகிறார்களே தவிர மனைவியாக அல்ல என பேசியிருப்பார். இதைக் கேட்டவுடன் என்னை நானே மணந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மீண்டும் தோன்றியது. இதுபோன்று இந்தியப் பெண்கள் யாராவது திருமணம் செய்திருக்கிறார்களா என்று ஆன்லைனில் தேடிப் பார்த்தேன். ஆனால், யாரும் அப்படி செய்துகொள்ளவில்லை. திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். இந்த திருமணம் மூலம் என்னை நானே காதலிக்கப் போகிறேன். என்னுடைய பெற்றோர் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சிதான். எனது மெஹந்தி நிகழ்ச்சி ஜூன் 9ஆம் தேதியும், திருமணம் ஜூன் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது என்றார். திருமணம் முடிந்த பின்னர் இரண்டு வாரம் கோவாவுக்கு ஹனிமூனுக்கு செல்ல உள்ளதாகவும் கூறியுள்ளார்.