• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

யுஜிசி – நெட் தேர்வு குறித்த அறிவிப்பு..!

Byகாயத்ரி

Feb 17, 2022

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற இருந்த யுஜிசி – நெட் தேர்வு, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜூன் 2021-ல் நடைபெற இருந்த நெட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த ஒரு தேர்வுகளும் சேர்த்து 2021 நவம்பர் 20-ம் தேதி முதல் 2022 ஜனவரி 5-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன.இந்த தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு முடிவுகள் இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.