• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் தேதி மாற்றம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். கொரோனா பரவலை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்துவதால் தேர்தல் இரண்டு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இயக்குனர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்திருப்பதால் ஜனவரி 23ம் தேதி ஞாயிறு அன்று நடைபெற இருந்த இயக்குனர் சங்க தேர்தல் 25ம் தேதி செவ்வாய் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக மறுநாள் திங்கட்கிழமை சென்னை திரும்பும்போது சிரமம் என்பதால் செவ்வாய் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.