• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இறுதி வாக்காளர் வெளியீடு!

Byகுமார்

Jan 5, 2022

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி (1‌.1.2022)ஆம் நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சுருக்கத் திட்டம் 2022 கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 13 ஆயிரத்து 33! இதில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 31 ஆயிரத்து 825, பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 81 ஆயிரத்து 7, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 201!

சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 இன் படி நீக்க பட்டவர்களின் எண்ணிக்கை 10,768, என்றும் சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,074! கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை வித்தியாசம் 31, 306 அதிகரித்துள்ளது.

மேலும் மதுரை மாவட்டத்தில் அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி. இதில் வாக்காளர்களின் எண்ணிக்கை (3,31,829). குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதி சோழவந்தான் தனி சட்டமன்ற தொகுதி இதில் வாக்காளர்களின் எண்ணிக்கை (2,19,194). மதுரையில் மொத்த வாக்குச்சாவடி அமைவிடங்கள் 1163 மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2718ஆக உள்ளது’ என்றார்!