• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் வெடிவிபத்து; உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம்!

சாத்தூர் அருகேவுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் புதன்கிழமை (ஜன.5) காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் உயிரிழதோர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், வெடி விபத்தில் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூபாய் 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.