மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா தென் மாவட்ட விவசாயிகளின் வாழ் வாதாரமான முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பென்னிகுக் குடும்பத்தார் மற்றும் லண்டன் வாழ் தமிழ் சங்கத்தினர்
வேண்டுகோளை ஏற்று லண்டன் தமிழ் சங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

மேலும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவில் பழமையும் பெருமையும் வாய்ந்த பாரம்பரியமிக்க தமிழர்களின் வீர விளையாட்டான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஜான் பென்னிகுக் குடும்பத்தாரை அழைப்பதற்காகவும் லண்டன் சென்றுள்ள நிலையில் எம் எல் ஏ கருப்பையாவின் லண்டன் பயணம் வெற்றி பெற வேண்டி வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தவெக சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஏ ஆர் பிரகாஷ் ஆர் கஜேந்திர பிரபு சி ரகுபதி ஜே மதுநிதி உள்பட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



