• Tue. Nov 3rd, 2026

கோவை வந்த முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு!

BySeenu

Nov 3, 2026

ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் நிர்மல் குமார், செங்கோட்டையன், விக்னேஷ் சம்பத், கமலி விஜய், பாலாஜி, அருண்ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதற்காக முன்னதாகவே முதல்வர் பயணிக்க உள்ள கான்வாய் வாகனங்கள் கோவை விமான நிலையத்தின் ஸ்பெஷல் கேட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

வரவேற்பைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் சாலை மார்க்கமாக ஈரோட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் அவர் பயணிக்க உள்ள வழித்தடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், முதல்வர் பயணிக்கும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

விமான நிலைய சிக்னல், சின்னியம்பாளையம், கணியூர் டோல்கேட், கருமத்தம்பட்டி நான்கு ரோடு, தெக்கலூர் பிரிவு, நீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முதல்வரைப் பார்வையிடுவதற்காக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.

கோவை விமான நிலையம் முதல் ஈரோடு செல்லும் வழித்தடம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.