மதுரை மாவட்டத்திற்கு (25.10.2026) ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, கர்டர் பாலம் சுரங்கப்பாதையில் உள்ள மழைநீர் வெளியேற்றும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.

மேலும், மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்கான மோட்டார் பம்புகள் மற்றும் பிற உபகரணங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, கனமழையின்போது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் உடன் உள்ளார்.




