நாடு முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி எனத் தொடர் பண்டிகை கொண்டாடப்படுகிறது., இந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள சூழலில்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள மழலையர் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு இன்று உசிலம்பட்டி மழலையர் பள்ளிகளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு மழலையர்களுக்கு நெல்மணிகள், அரிசி, மாவு உள்ளிட்ட தானியங்களில் தமிழ் மொழியின் உயிரெழுத்தின் முதல் எழுத்தான அ எழுதி புதிய மாணவர் சேர்க்கையை சிறப்பாக தொடங்கியுள்ளனர்.,

இதில் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள மழலையார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.,



