• Tue. Oct 20th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் தாராபுரம் அறிவிப்பு சுயநலமா, பொதுநலமா?

ByKalamegam Viswanathan

Oct 20, 2026

தவெக அரசு பொறுப்பேற்று இந்த 5 மாதங்களில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது இது எல்லோருக்கும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

புதிய அரசு பொறுப்பேற்றதும், ராக்கெட் வேகத்தில் செல்ல வேண்டிய தவெக அரசு, புஷ்வானம் போல் கலர் கலராக ரீல்ஸாக வெளியிடுகிறார்கள் அதில் தான் தங்களுடைய நேரத்தையும் அதிகாரத்தையும் செலவழிகிறார்கள். ஆக்கப்பூர்வமான பணிகளை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

துறைகள் தோறும் வளர்ச்சிப் பணிகள் மூலம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான புதிய அரசிற்கான வேகத்தை நாம் இதுவரை பார்க்க முடியவில்லை. 5 மாதங்கள் சென்றுவிட்டது. எங்கும் அமைதி, எதிலும் அமைதி, எப்போதும் அமைதி என முதல்வரின் உள்துறை ஆரம்பித்து உணவுத்துறை வரை கும்பகர்ண தூக்கத்தில் அமைதியாக இருப்பது மக்களுக்கு ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. .

தவெக அரசு ஏன் இந்த அமைதிப் புரட்சியை தன் அடையாளமாக அணிகலனாக அணிந்திருக்கிறது என்பதும் மக்களுக்கு புரியவில்லை. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது என்றால், அப்படி இல்லை என்று சத்தியம் செய்கிறார் மின்சாரத் துறை அமைச்சர். வரலாறுகாணாத வகையிலே விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது என்றால், இங்கே அப்படி ஒன்றும் விலைவாசி உயரவில்லையே என்று அமைச்சர் சத்தியம் செய்வதற்கு தவறவில்லை.

தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதலாக கொலை நடக்காத நாளே இல்லை என்று சுட்டிக்காட்டினால் அப்படியா? என்று ஆச்சரியமாக கேட்டுவிட்டு, இது ஒன்றும் புதிது
இல்லை எப்போதும் இங்கே நடப்பதுதானே என்று மக்களை ஆச்சரியப்படுகின்ற வகையிலே அதிரடியாக புதிய விளக்கத்தை தருகிறது தவெக அரசு.

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என்று கேட்டால், தமிழ்நாட்டு கடன் சுமையில் இப்போது எங்களால் என்ன செய்ய முடியும்? இப்போதைக்கு முடிந்ததை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். செய்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரும் விமர்சனம் செய்யக்கூடாது, கேள்வி கேட்கக்கூடாது என்கிறார்கள்.

பயிர் கடன் முழு தள்ளுபடி என்று சொன்னீர்கள், ஆனால் பாதிதான் தள்ளுபடி செய்கிறீர்களே, ஏன் என்று விவசாயிகள் கேள்வி கேட்டால், அந்த கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியாக அன்னபூரணி சூப்பர் 6 என்று வாக்குறுதி தந்து விட்டு இப்போது அதிகாரம் கைக்கு வந்த பின்பு 3 சிலிண்டர் தருவோம் என்று அறிவித்துள்ளார்கள்.

கடன் சுமைதான் முதல்வர் இந்த அறிவிப்புக்கு காரணமா என்று சொன்னால், விஜய்க்கு முன்பே தெரியுமே? தமிழ்நாட்டின் கடன் சுமை என்னவென்று. ஆக, எல்லாம் தெரிந்த முதல்வர் மக்களை ஏமாற்றுகின்ற செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை தந்துவிட்டாரா? என்பதுதான் மக்களுடைய இப்போதைய கேள்வி. ஆனால் கேள்வியும் கேட்கக்கூடாது, விமர்சனமும் செய்யக்கூடாது.

தற்போது தமிழ்நாட்டிலே நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற உணவுப் பொருட்களின் கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலை, மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலைகளில் தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65, மட்டன் சுக்கா முதல் பாஸ்ட் ஃபுட் உணவு வகைகள் அனைத்தும் ஏற்கனவே பல நாட்கள் பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், மேலும் உணவிலே செயற்கை விரும்பிகளை, சுவைக்காகவும், பார்வைக்காகவும் அதிகம் சேர்ப்பதால், சுகாதாரம் இல்லாமல் தயாரிப்பது என்று தரமில்லாத உணவை தவெக அரசில் தமிழகம் எங்கும் வெகு சாதாரணமாக விற்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

இதையும் அறிந்தும் அறியாமலும் அவசரத்திற்கு குறைந்த பட்ஜெட்டில் உணவு வேண்டும் என்கிற அந்த நிலையில் பொதுமக்கள் இதை உண்ணுகிற பழக்கத்தை நாம் பார்க்கிறோம். அது பின்பு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி விடுவது மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்துகிறது. இவற்றையெல்லாம் தடுத்து தமிழக மக்களுக்கு கலப்பட உணவுகளில் இருந்து விடிவு காலம் ஏற்பட, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற உணவுத்துறை விழித்துக்கொண்டு, இதுபோன்ற உணவு வகைகள் உரிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும் ஸஎங்கே இதையெல்லாம் கவனிக்க நம்ம முதல்வருக்கு நேரம் இருக்கிறது? அவருக்குத்தான் தவெக அரசுக்கு தேவையான பெரும்பான்மை உறுதி செய்யவே நேரம் போகவில்லை.

தனி பெரும்பான்மை இல்லாத தவெக அரசுக்கு தனி பெரும்பான்மை கொண்டுவர இந்த விஜய் எந்த எல்லைக்கும் செல்வேன் என்பதைப் போல எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு பட்டை நாமம் போட்டுவிடுகிறார்

, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக

நாம் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கு இடப்பெயர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

எந்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினராக இடப்பெயர்ச்சிக்கு வருகிறார்களோ, அவர்களுக்கு மட்டும் பக்கம் பக்கமாக நலத்திட்டங்களை தவெக அரசு கொடுக்கும்.

ஆனால் விஜய் முதல்வர் பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்பதை சொல்லிலே மட்டும்தான் அவர் கடைபிடிக்கிறார் தவிர, பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்று அவர் செயலிவ் இருக்கிறது என்று சொன்னால், தவெகவிற்கு மட்டுமே என்பது மட்டும்தான் அவருடைய தாரக மந்திரமாக இருக்கிறது.

முதல்வர் விஜய் எல்லோருக்கும் ம கருணை பார்வை காட்டுவாரா? அல்லது தவெக தொகுதிக்கு மட்டும்தானாஒ? இன்னைக்கு மதுராந்தத்துக்கும் தாராபுரத்துக்கும் வாரி வழங்கி இருக்கிறார். ஐந்து மாதங்களாக அன்றைக்கு தவெக கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

ஆகவே, இது எதை காட்டுகிறது என்றால், ஏற்கனவே குதிரை பேரம் நடைபெற்றிருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. இப்பொழுது ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தான் இங்கே இருக்க முடியும். எதிர்க்கட்சிகள் எல்லாம் மூட்டை கட்டி ஜனநாயகத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்பது ஒரு சர்வாதிகாரத்தின் தொடக்கமாக விஜய் இன்றைக்கு அறிவித்திருக்கிற திட்டங்களை வரவேற்கிற அதே நேரத்திலே, ஏன் இந்த பாரபட்சம்?

ஒரு கண்ணிலே வெண்ணை, ஒரு கண்ணிலே சுண்ணாம்பு, ஆளுங்கட்சிக்கு வெண்ணை கொடுக்கிற முதல்வர் விஜய் எதிர்க்கட்சிக்கு சுண்ணாம்பை தடவுவது இது ஜனநாயகத்துக்கு இலக்கணம் தானா?

234 தொகுதிக்கும் அவர் முதல்வர் என்பதை மறந்துவிட்டாரா? தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும்தான் இனி திட்டங்களை பெற முடியுமா? என்கிற மிகப்பெரிய கேள்வி இன்றைய அறிவிப்பில் மறைமுகமாக அரசியல் தத்துவம் அங்கே ஒளிந்திருக்கிறது என்பது நவெட்ட வெளிச்சமாகி உள்ளது.

ஆகவே, முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் தாராபுரம் அறிவிப்பு சுயநலமா, பொதுநலமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது. 234 தொகுதிக்கும் முதல்வரா அல்லது தவெகவற்கு மட்டும் முதல்வரா? என கூறினார்.