• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் அறிக்கை..,

ByKalamegam Viswanathan

Sep 15, 2026

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு இந்து மக்களின் உணர்வுகளை மதித்து வாழ்த்து தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் சார்பாகவும், இந்து மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் இந்து மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்திக்கு இதுபோன்ற வாழ்த்துகளைத் தெரிவிக்காத நிலை இருந்ததாக இந்து மக்கள் மத்தியில் கருத்து நிலவி வந்தது.

இந்நிலையில், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் அவர்கள், மதச்சார்பற்ற அரசின் தலைவராக இருந்து கொண்டு அனைத்து மதங்களையும், அனைத்து சமுதாய மக்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மதம், சாதி, மொழி என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதே உண்மையான மதச்சார்பின்மையாகும். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை இந்து மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.