மதுரை மேலமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாடார் தெரு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிழற்குடை மற்றும் படிப்பகத்தை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வருகை தந்து திறந்து வைத்தார்

இதனைத் தொடர்ந்து மதுரை எம்பி வெங்கடேசன் அவர்களை பார்த்து பெண் ஒருவர் திடீரென “நீங்கள் தான் தவெக கட்சியில் சேர்ந்து விட்டீர்கள் எங்களுடைய விவசாய கடனை தள்ளுபடி செய்ய சொல்லுங்க” என்று கேட்டார்
உடனே எம்பி “நான் கட்சியில் சேரவில்லை எங்கள் கட்சி கூட்டணியில் தவெக இருக்கிறது” என அந்த பெண்ணிடம் தெரிவித்தார் திடீரென பெண் இவ்வாறு கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது*
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலமாத்தூரில் பேருந்து நிறுத்தத்திற்கான நிழற்குடை மற்றும் படிப்பகம் திறந்து வைத்திருக்கின்றோம்
50 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் இங்கு சிறிய வாசக சாலை திறந்து வைத்திருக்கிறார்
அந்தக் கட்டிடம் இடிந்து விட்டது அந்த வாசகசாலையும் பேருந்து நிழற்குடையும் இணைத்து பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நினைவு வாசக சாலையாக இந்த படிப்பகத்தை திறந்து வைத்திருக்கின்றோம்
இரண்டு மாத தமிழக அரசின் செயல்பாடு குறித்து கேட்டபோது
எல்லா இடங்களிலும் பரிட்சை பேப்பரை நீட்டி கேள்வி எழுதிக் கொண்டிருக்க முடியாது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அறிவிக்கபட வேண்டிய திட்டங்கள் குறித்தும் பேசலாம்
மாநகராட்சி ஊழல் விசாரணை குறித்து கேட்டபோது

மதுரை மாநகராட்சி வரிவிதிப்பில் நிகழ்ந்த ஊழல் பற்றி முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தலையிட்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து இருக்கிறது அந்த குழு தனது விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் அதில் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதை கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் தெரிவித்தோம் தற்போதும் தெரிவிக்கின்றோம்
தமிழக முதல்வர் குறித்து ஆர்பி உதயகுமார் மற்றும் செல்லூர்
ராஜீ ஒருமையில் பேசியது குறித்து கேள்விக்கு
தமிழக முதல்வர் மட்டுமல்ல எந்த ஒரு அரசியல் தலைவர்களையும் பேசும்போது பொது நாகரிகத்தை பேண வேண்டும் என்பதே எல்லோருடைய கடமை நாம் எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு பேசினாலும் மக்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவே நாகரீகமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்
எந்த தலைவரைப் பற்றி ஒருமையிலும் காயம்படும்படியான பகடையில் பேசுவதை அமைச்சர்கள் முன்னால் அமைச்சர்கள் அறியப்பட்ட மனிதர்கள் தவிர்க்க வேண்டும்
துவரிமான் பகுதி சாலை விரிவாக்க பணி குறித்து கேட்டபோது
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை நான்கு ஆண்டுகள் சந்தித்து இந்தத் துவரிமான் சந்திப்பு தான் மிக அதிக விபத்து நடக்கும் பகுதி எனவே அதற்கு சிறப்பு பாலம் தர வேண்டும் என்று கேட்டுநான்கு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு
பாலத்திற்கு அனுமதி கிடைத்தது ஆறு மாதத்திற்கு முன்புதான் கட்டுமான பணியை நான் துவக்கி வைத்தேன் அங்கு சென்று பாலப்பணிகளை பார்த்துவிட்டு தான் இங்கு வருகிறேன் பணிகள் விரைவாக நடைபெறுகிறது பாலம் நிறைவு பெற்றால் பிற்பகுதி 100% விபத்து தவிர்க்கப்படும்
சாலை விரிவாக்க பணி NHAI சம்பந்தப்பட்ட பணி அல்ல பாலம் NHAI சம்பந்தப்பட்டது அது தான் பிரதானம்.
எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழா குறித்த கேள்விக்கு,
பெரும்பான்மையான வேலைகள் முடிவுற்று கொண்டிருக்கிறது சிறிது வேலைகள் இருக்கிறது இந்த மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20 ம் தேதி துவங்க இருக்கிறது நிச்சயம் எல்லா கூட்டத்திலும் மதுரை எய்ம்ஸ் பற்றி ஏதாவது ஒரு வழியில் நாங்கள் கேட்டிருக்கிறோம்
இப்போதும் கேட்போம்
இவ்வாறு பேசினார்

இந்த நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் லட்சுமி காந்தன் உதவி பொறியாளர் பகவான் ராஜா ஊராட்சி செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி திருப்பரங்குன்றம் இடைக்குழு செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட குழு உறுப்பினர் பிரேமலதா இடைக்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் அய்யாவு சுமதி திருத்தரன் மற்றும் கட்சியின் கிளை தோழர்கள் கிராம மக்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மணவாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்




