• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காவலரை 3 பேர் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..,

ByKalamegam Viswanathan

Jul 14, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் நிற்பதாக குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிந்து திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் குற்ற தடுப்பு பிரிவு காவலர் ராஜா மற்றும் சிலர் சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றனர் .

இதில் மற்றவர்கள் வரும் முன்னர் காவலர் ராஜா விரைவாக சென்று பெருங்குடி ராம்கோ பயணியர் விடுதி அருகே சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களை விசாரணை செய்தார்.

போதையில் இருந்த 3 நபர்கள் ராஜாவிடம் போதையில் தகராறு செய்தனர்.

குற்ற தடுப்பு பிரிவு காவலர் ராஜா அவர்களை விசாரணைசெய்யும்போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா காட்டமங்கலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது இங்கு எதற்கு வந்தீர்கள் என கேட்டதும் அவர்கள் ஆத்திரமடைந்த கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் கை இடுப்பு தொடை ஆகிய பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது .

இதனை தொடர்ந்து அருகில் உள்ள ஒரு கூச்சலிடவே 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பியோடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீசார் காவலர் ராஜாவை நீட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் 16 தையல் போடப்பட்டது கை நெஞ்சு தொடை பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இன்று காலை நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ராஜாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .

காயமடைந்த காவலராஜா ஆபத்தான நிலையில் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆயுதங்களுடன் திரிந்தவர்களை குற்ற தடுப்பு பிரிவு காவலர் விசாரணை செய்தபோது தாக்கிய சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்களே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே சமூக விரோதிகளால் உயிர் பாதுகாப்பற்ற சூழ்நிலை என்று பொதுமக்களிடையே பெரும்பீதியும் ஏற்படுத்தியுள்ளது .

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதல் கட்டமாக சுற்று காவலரை தாக்கியது வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் மற்றும் கமுதி கடமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்துக்காளை பாண்டியராஜன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்துதிருமங்கலம் காவல்துணை கண்காணிப்பாளர்பேரில் இரண்டு தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.