• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் அருகே பூமி பூஜை போட்டு ஒரு ஆண்டும் 3 மாதமாகியும் சர்வீஸ் ரோடு கூட போடாத நிலை..,

ByKalamegam Viswanathan

Jul 14, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி அய்யனார் கோவில் வளாகத் தில்24 மணிநேரமும் கனரக வாகனங்கள் சென்று வரக்கூடியவிருதுநகர் – – -சமயநல்லூர் நான்கு வழிச்சாலை அமைந்து உள்ளது.வேடர் புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, சின்னசாக்கிலிப்பட்டி,வெள்ளப் பாறைப்பட்டி, தென்பழஞ்சி, மாவிலிப்பட்டி, வடபழஞ்சி தனக்கன்குளம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டகிராம பொதுமக்கள் , விவசாயிகள், மாணவ, மாணவிகள்தினமும் நான்கு வழிச்சாலையை கடந்து சென்று வருகிறார்கள்.

அவர்கள் ஒவ்வொரு ம் உயிரை பணையம் வைத்து மிகுந்த கவனத்துடன் நான்குவழிச்சாலையை கடந்து வருகிறார்கள்இந்த நிலையிலும்தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி அய்யனார் கோவில் வளாகத்தில் நான்கு வழிச்சாலை பிரிவில் சங்கிலிதொடர் போல அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் உயிர் பலியாகி உள்ளனர். மேலும் வாகனங்களும் நிலைகுலைந்து சுக்குநூறாக சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.

சுரங்க பாதையுடன் பாலம்

இதனால் உரிய இடத்தில்போர்க்கால அடிப்படையில் மின்கோபுரம் அமைக்கப்பட வேண்டும், சுரங்க பாதையுடன் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். மேலும் வாகனங்களின் அதிவேகத்தை குறைப்பதற்காகவேகத்தடை அமைக்கப்படவேண்டும். அதிநவீன கண்கானிப்பு கேமிராக்களுடன் 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். என்றுஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி செய்தி எதிரொலி
இது தொடர்பாக படத்துடன் தினத்தந்தி நாளிதழில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.இந்த நிலையில் தனக்கன்குளம், வேடர் புளியங்குளம், தோப்பூர், நிலையூர் முதல் பிட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விபத்தினை தடுக்க சுரங்க பாதை அல்லது உயர் மட்டபாலம் கட்டுவதற்கு அரசு முன் வரவேண்டும் என்றுமத்திய, மாநில அரசுகளுக்குசிறப்பு கவன ஈர்ப்yதீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகம் வழியாகஅரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதே சமயம்திருப்பரங்குன்றம் தாலுகாக மார்க்சிிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் கிராம மக்களிடையே கையெழுத்து பெறப்பட்டு அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுஇந்த நிலையில் மாணிக்கம் தாகூர் எம்.பி.யும்பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துபோர்க்கால அடிப்படையில்சுரங்கப்பாதையுடன் கூடிய உயர்மட்ட பாலம்அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அவர்சாலைப் போக்குவரத்து மத்திய மந்திரியைநேரில் சந்தித்து உயர் மட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ரூ.43 கோடியில் உயர் மட்ட பாலம்

இதனையொட்டி தனக்கன்குளம் வெங்கல மூர்த்தி அய்யனார் கோவில் வளாகத்தில் நான்கு வழிச்சாலையில்சுரங்கப்பாதையுடன் கூடியஉயர் மட்ட பாலம் அமைப்பதற்காக ரூ 43 கோடி நிதி மத்திய அரசு ஒதுக்கியது இதை அப்பகுதி பொது மக்கள் வரவேற்றனர். இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அன்று உயர்மட்டபாலம் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது இதனையடுத்து கட்டுமான பணி தொடங்கி கூடிய விரைவில் உயர்பாலம் அமையும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள்எதிர்பார்ப்பு நடக்கவில்லை. 4 வழிச்சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு கூட முழுமையாக போடாத நிலையாக இருந்து வருகிறது..

ஒரு ஆண்டும் 3 மாதமாகியும் பணி நடக்கவில்லை.

பூமிபூஜை போட்டு ஒரு ஆண்டும் 3 மாதமும் ஓடோடி விட்டது. பெயருக்கு வாரத்தில் ஒரு நாள் அல்லது 2 நாள் மட்டுமே சர்வீஸ் ரோட்டிற்காக மண் பரப்பும் பணி நடக்கிறது இதனால் பாலம் கட்டும் பணி தொடங்குவதுஎப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் உயர் மட்ட பாலம் எதிர் பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது. இதேவேளையில் அடிக்கடி விபத்தும் உயிர் பலி பொருள் சேதம் நடந்த வாறு உள்ளது. ஆகவேசம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.