• Tue. May 12th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி..,

BySeenu

May 12, 2026

வரும் 2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி, கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் தி கிராண்ட் ரீஜென்ட்- ல் மே 15 தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஏழு முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் நேரடியாகப் பங்கேற்கும் இக்கண்காட்சியில், இந்திய மாணவர்களுக்காக 10,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயில்வது குறித்து இந்திய தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள சமீபத்திய விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றும் ஒரே வெளிநாடு ரஷ்யா ஆகும்.

இக்கண்காட்சியில் எம்.பி.பி.எஸ் மற்றும் இதர படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை நடைபெறும். அனுமதி இலவசம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மாணவர்கள் 9282 221 221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இப்படிப்புகளுக்கு ரஷ்ய அரசாங்கம் அதிகளவில் மானியம் வழங்குவதால், இதற்கான கட்டணம் ஆண்டுக்கு மிகக்குறைவாக ரூ. 3.5 லட்சம் முதல் தொடங்குகிறது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தொடர்புடைய முக்கியப் பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் (எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு 40% மட்டுமே) பெற்ற இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் பயின்ற மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி (CET), ஐ.இ.எல்.டி.எஸ் (IELTS) போன்ற தகுதித் தேர்வுகள் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கல்விக் கண்காட்சியில் பயோ-டெக்னாலஜி (Bio-technology), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் தரவு அறிவியல் (Data Science) போன்ற வளர்ந்து வரும் நவீனத் துறைகளில் படிப்புகளை வழங்கும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களும் பங்கேற்கின்றன.