• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

Byமுகமதி

Jan 31, 2026

புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவத் துணைப் படிப்புகளில் நுழைவுத் தேர்வை கொண்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக மாணவரணி சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மாவட்ட மாணவரணி தலைவர் நே.குட்டிவீரமணி தலைமை வகித்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலும் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்ட காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பெரியார் பெருந்தொண்டர் செ.இராசேந்திரன், மாநில ப.க. அமைப்பாளர் அ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக தலைமைக் கழக பேச்சாளர் மாங்காடு சுப. மணியரசன் கண்டன உரையாற்றினார். நிகழ்வில் மேலும் நகர இளைஞரணி அமைப்பாளர் கோ தாமரைச்செல்வன், மகளிர் அணியைச் சேர்ந்த தா.மரகதம், மாநகரச் செயலாளர் பூ.சி.இளங்கோ, மாவட்ட இணைச்செயலாளர் வெ. ஆசைத்தம்பி, மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், மாநகர திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பி. சேகர், ஆ.பத்மநாபன், அரிமளம் ஒன்றிய செயலாளர் துரை இந்திரஜித், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆறு பாலச்சந்தர், மாவட்ட துணைச் செயலாளர் ரெ.மு. தர்மராசு, விடுதலை நாளிதழ் மாவட்டச் செய்தியாளர் ம.மு.கண்ணன், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த க.மாதவன், திருமயம் ஒன்றிய செயலாளர் க. மாரியப்பன், மாவட்ட ப.க தலைவர் இரா மலர்மன்னன், மாணவர் அணியை சேர்ந்த சு.க.கதிரவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகவும் பொந்திய அரசியல் இது போன்ற திட்டங்களுக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்டனர்.