செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் சார்பில், அம்பேத்கர் நகர் குடியிருப்போர் இணைந்து இந்த விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

விழாவை முன்னிட்டு கண்ணதாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரஞ்சன் அவர்கள் மூவண்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கும் புத்தகங்கள், எழுதுகோல்கள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு குடியரசு தினத்தின் முக்கியத்துவம் நினைவுகூரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேசிய உணர்வுடன் விழாவை கொண்டாடினர். டைம் சிவா, பாரதிதாசன், முருகன், சகாயம், நீர்வள்ளன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த குடியரசு தின விழா, அனைவருக்கும் நாட்டுப்பற்று உணர்வை மேலும் வலுப்படுத்தியதாக அமைந்தது.






