திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) அன்று மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட இருக்கிறது.

இந்த 22 பெட்டிகள் கொண்ட ரயிலில் வந்தே பாரத் ரயில் போல இருபுறமும் ரயில் பெட்டிகளுடன் இணைந்த இன்ஜின்கள் உள்ளன. இந்த ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க தகுதி உடையது. குலுங்கல் இல்லாமல் பயணத்தை இனிமையாக்கும் வகையில் ரயில் பெட்டி இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வசதியான இருக்கை மற்றும் படுக்கை வசதி அமைப்புகள், தண்ணீர் பாட்டில், மொபைல் போன் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திட நவீன வசதிகள், மடித்து வைக்கக் கூடிய சிறிய உணவு மேசை, ஒளி விளக்குகள், பொது அறிவிப்பு வசதி, இரவு நேரத்தில் எளிதாக நடக்கும் வகையில் ரேடியம் ஒளிரும் தரை விரிப்புகள் ஆகியவை முக்கிய சிறப்பு அம்சங்கள் ஆகும்.
இரவு நேரத்தில் அவசர தேவைக்கு ரயில் பெட்டிக்கு வெளியே ஒளிரும் விளக்குகளும் உள்ளன. இது போன்ற மேலும் பல சிறப்பம்சங்களை ரயிலில் பயணித்துக் கொண்டே நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் பத்திரிகையாளர்கள் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரயிலில் போதிய இருக்கை வசதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் வருகை குறித்து ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தகவல் அனுப்பவும்.





