தமிழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அதில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில் கீழ் பல கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் பெரும்பாக்கம் மெயின் ரோடு ஜல்லடியான்பேட்டை, மேடவாக்கத்தில் செயல்பட்டு வரும் கடை எண் 4386, பணிபுரியும் சூப்பர்வைசர் ஜஸ்டின் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பொதுமக்களிடம் வசூலிக்கும் தொகையை மீண்டும் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாயை திருப்பி கொடுக்கப்பட வேண்டும் என்ற புதிய விதியை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் அதற்கு நேர்மாறாக சூப்பர் வைசர் திரும்பி வராத பாட்டில்களின் பணத்தை அரசிடம் ஒப்படைக்காமல் அனைத்து பாட்டில்களும் திரும்பி வந்து விட்டதாக போலி கணக்கு காட்டி அந்த பணத்தை, பாட்டில்கள் எடுக்கும் ஒப்பந்ததாரர் மற்றும் சூப்பர்வைசர் ஜஸ்டின் என இருவரும் தலா 5 ரூபாய் வீதம் பிரித்து எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது டாஸ்மாக் விதிகளுக்கு எதிரானது என கூறப்படுகிறது.
இது தவிர ஏற்கனவே டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு அதனை டாஸ்மாக் கடை விற்பனையாளர், சூப்பர்வைசர், டாஸ்மாக் அதிகாரிகள், அரசியல் வாதிகள் வரை பங்கு செல்வதாக குற்றச்சாட்டு அமலாக்கத்துறை வரை சென்று 1000 கோடி டாஸ்மாக் ஊழல் புகார் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் 4386 கடை விற்பனையாளர் ரகோத்தம்மன், மற்றும் சூப்பர்வைசர் ஜஸ்டின் இருவரும் சேர்ந்து தினந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் சட்டவிரோதமாக பணம் சம்பாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதனை டாஸ்மாக் நிர்வாகம் முறையாக விசாரித்து கடையின் விற்பனையாளர் மற்றும் சூப்பர்வைசர், டாஸ்மாக் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் கொடுத்து ஏமாறும் அப்பாவி மதுப்பிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





