கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய பொங்கல் திருவிழா நரசிபுரத்தில் உள்ள வெள்ளிங்கிரி கோசாலையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குத்து விளக்கேற்றி நிகழ்வை துவக்கிவைத்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் சவுத் இன் தலைவர் பொன்ராஜ் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தை சார்ந்த முன்னாள் தலைவர்கள் , நிர்வாகிகள், குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கோமாதா பூஜை, பொங்கல் வைத்தல் குழந்தைகள் பெரியவர்கள் இவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் உரி அடித்தல்,கயிறு இழுத்தல், பெண்களுக்கான கோல போட்டி மற்றும் குழந்தைகளுக்கான பலூன் ஊதுதல் நடைபெற்றது .

மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை Rtn.முருகேசன் செய்திருந்தார். இதில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர். மேலும் நிகழ்ச்சி இறுதியில் செயலாளர் வேலுச்சாமி நன்றி உரை கூறினார்.




