மலைப்பகுதிகளில் இயந்திரப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இயற்கை வளம் கொள்ளையாகி வருகிறது. அதனால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்
மலைகளை அழிக்கும் ஹிட்டாச்சி ஜேசிபி வெடிவைக்கும் ,இயந்திரம், போர்வெல் உள்ளிட்ட இயந்திர பயன்பாடுகளை தடை செய்ய வேண்டும், என தொடர்ந்து பல்வேறு வழக்குகள் இருந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
தொடர்ந்து கொடைக்கானல் மலை முழுவதும் இயந்திர பயன்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் மலைகளை உடைக்கும் மலைகளை அழிக்கும் தடை செய்யப்பட்ட இயந்திரங்களை வனத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவோடு ஜேசிபி ஹிட்டாச்சி போர்வெல் வெடி வைக்கும் இயந்திரங்களை மலைகளுக்கு கொண்டுவந்து தொடர்ந்து அழித்து வருகின்றனர்.

அதேபோல் கொடைக்கானல் கீழ்மலையான ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மஞ்சள் பரப்பு. புல்லாவெளி . சோலைக்காடு. மணலூர்.பெரும்பாறை ஆடலூர் .பன்றி மலை உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து அதிகாரிகள் ஆதரவோடு மலைகளை அழிக்கும் இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் காமனூரில் சட்ட விரோதமாக, தடை செய்யப்பட்ட கனரக வாகனமான ஜேசிபி, ஹிட்டாச்சி மூலம் அரசு நிலங்களில் உள்ள பாறைகளை உடைத்தும், நீர்வழி தடங்களை தடை செய்தும் செந்தில் பாண்டியன் என்பவர் சாலைகள் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டி பெரும்பாறையை சேர்ந்த தமிழ்வேந்தன் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, சட்ட விரோதமாக சாலைகள் அமைக்கப்பட்ட இடங்களை RDO நிலைக்கு குறையாத ஒரு அதிகாரி நேரில் ஆய்வு செய்து தெளிவான அறிக்கையை வரும் 27.1.2026 அன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து கொடைக்கானல் மேல்மலை பகுதியான பூம்பாறை. மன்னவனூர்.பூண்டி . கிளாவரை. கவுஞ்சி .கூக்கால்.வில்பட்டி. அட்டுவம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கீழ் மலை பண்ணைக்காடு தாண்டிகுடி . குப்பம்மாள்பட்டி. கேசி பட்டி. பெரியூர். பாச்சலூர் மற்றும் ஆத்தூர் மணலூர் ஆடலூர் பன்றி மலை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட மலைகளில் மலைகளை அழிக்கும் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடுகளை உடனடியாக அனைத்தையும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் கோட்டாட்சியர் கூறியபடி இறக்க வேண்டும் சம்பந்தப்பட்ட வருவாய்துறை வனத்துறை அதிகாரிகள் மீதும் சோதனை சாவடி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மலைகளைக் காப்பார்களா சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் என்ற கேள்வி எழுந்துள்ளது.




