தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு அமைச்சர்கள் மாண்புமிகு எஸ் ரகுபதி சிவ.வீ மெய்ய நாதன் ஆகியோர் பொடியா செய்து தொடங்கி வைத்தனர்.

எண்ணூர் காளைகள் களமிறங்கின. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் இந்நிகழ்வில் மாடுகளை அடக்குவதற்காக களத்தில் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரசிகர்கள் ஜல்லிக்கட்டு போட்டி ரசித்து வருகின்றனர்.




