அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஏராளமான காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள் , உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளையுடன் காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய புகைப்படங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அவற்றுக்கு தகுதி சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.
வரும் தைப்பொங்கல் முதல் நாள் ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது .
அறுவடை திருநாளான தைப்பொங்கலை தமிழர்கள் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு விழாவில் தங்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் நிலைநாட்டு வகையில் கொண்டாடி மகிழ்வர்.
அந்த வகையில் வரும் 15ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற அவனியாபுரம் மற்றும் சிந்தாமணி சாமநத்தம், திருப்பரங்குன்றம் விளாச்சேரி சிலைமான் விரகனூர் நாகமலை புதுக்கோட்டை பெருங்குடி பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடை பரிசோதனைகளை மமருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

அதேபோல் அலங்காநல்லூர் பாலமேடு பகுதியிலே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளுக்கும் தகுதி பரிசோதனைகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .




