அரியலூர் அண்ணா சிலை அருகே,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்தும், அதனை வாபஸ் பெற கோரியும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத அறப்போராட்டத்திற்குசங்கத்தின் மாவட்ட தலைவர் ல.சண்முகம் தலைமை தாங்கினார்.உண்ணாவிரத போராட்டத்துக்கு வருகை தந்த அனைவரையும் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி உண்ணாவிரத போராட்டத் துவக்க உரையாற்றினார். சங்கத்தின் மாநில செயலாளர் ஷேக் தாவூத் வாழ்த்துரை வழங்கினார் .
தொடர்ந்து போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் என் .வேல்முருகன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு விக்கித் பாரத் ரோஸ்கர் ஆஜீவிகா மிஷன் கிராமின் என பெயர் மாற்றம் செய்துள்ளதையும் ,அதற்கான நிதி ஆதாரத்தை வெகுவாக குறைத்ததுகுறித்தும் , திட்டத்தில் டிஜிட்டல் முறை வருகை பதிவில் புகுத்தியது குறித்தும் , இத்திட்டத்தில் 40 % நிதியை மாநில அரசு ஏற்க வேண்டும்.

உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து இத்திட்டத்தினை முடக்க முயற்சிப்பதை கண்டித்தும், உடனே மத்திய அரசு, முயற்சியினை மக்கள் நலம் கருதி வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆனந்தன் கோரிக்கை நிறைவுரையாற்றினார் .உண்ணாவிரத போராட்டத்தில் முடிவில் சங்கத்தின் அரியலூர் வட்டார தலைவர் சிவதாஸ் நன்றி கூறினார்.




