அரியலூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் , இரத்த தான முகாம் நடைபெற்றது. இப்முகாமினை ஆலைத்தலைவர் ஆர்.பி .முத்தையா துவக்கி வைத்தார்.

அரியலூர் மருத்துவக்கல்லூரி இரத்த வங்கியின் மருத்துவர் கே.சந்திரசேகர் தலைமயில் மருத்துவ குழுவினர் இம் முகாமில் பங்கேற்று ஆலையில் பணியாளர்களிடம் 58 யூனிட் இரத்தத்தை தானமாகபெற்றனர் .தொடர்ந்து குருதி கொடையாளர்கள் அனைவரையும் பாராட்டும் வகையில் மருத்துவக்கல்லூரி இரத்த வங்கியின் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் அனைத்து துறைத்தலைவர்கள், ஆலையின் தொழில்முறை சுகாதார மைய (OHC) மருத்துவ அலுவலர், ஆலை பணியாளர் கள் பலர் கலந்து கொண்டனர்.




