தேனி மாவட்டத்தில் தனியார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து. அவர் கூறியதாவது:

படையப்பா இன்று மட்டுமல்ல இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடுவார்கள். அப்பா அண்ணனுடன் சேர்ந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி சுவாரசியமான படம் அந்த டீம் எல்லாரும் மிக நல்லா பண்ணி இருப்பாங்க. அந்த டீமில் இருந்தவர்கள் பலரும் இப்போது இல்லை ஐயா இல்லை மணிவண்ணன் சார் இல்லை, சௌந்தர்யா மேடம் இல்லை. அருமையான படம், அருமையான இசை, ஒளிப்பதிவு. இன்று குழந்தைகள் படம் பார்க்க வேண்டும் என்றால் தயவு செய்து இந்த படத்தை பாருங்கள்.

அஜித் மற்றும் விஜய் குறித்த கேள்விக்கு:
அரசியல் யார் வேண்டுமென்றாலும் இறங்கலாம் இதில் என்ன இருக்கிறது ஒன்னும் தப்பே இல்லை இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் என கூறினார்.




