ஆர் எஸ் மாத்தூரில் இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா. அமைச்சர் சாசி சிவசங்கர் திறந்து வைத்தார்.

குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம், ஆர்.எஸ்.மாத்தூர் ஊராட்சியில்,பொருளாதாரத்தில் மகளிர் தங்களை உயர்த்திக் கொள்ளவும், சுயதொழில் மூலம் முன்னேறவும் வழிவகை செய்யும் நோக்கில், ‘சிவசங்கர் சமூக நல அறக்கட்டளை’ (Sivasankar Social Welfare Trust) சார்பில், இலவசத் தையல் பயிற்சி மையத்தை மாவட்ட திமுக செயலாளர் ,போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் திறந்து வைத்தார்.


பின்னர் அவர் தெரிவித்ததாவது ,
10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, 2 மாத காலத்திற்கு சிறந்த முறையில் இங்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி பெண்கள் வாழ்வில் உயர வாழ்த்துகிறேன் என பேசினார்.இந்நிகழ்வில் செந்துறை ஒன்றிய திமுக செயலாளர்கள் வி எழில்மாறன்,பொன் செல்வம் ,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





