அரியலூர் மாவட்டத்தில் 7 சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகிறது.
இந்த ஆலைகளுக்கு, சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் இருந்து, ராட்சத டிப்பர் லாரிகள் மூலம் வி.கைகாட்டிலிருந்து அஸ்தினாபுரம் , காட்டுப் பிரிங்கியம் , வாலாஜா நகரம் வழியாக அரியலூருக்கு (பேக்டரி சைட்க்கு) சுண்ணாம்புக்கல் தினதோறும் எடுத்துச் செல்லப்படுகிறது.
குறிப்பாக ஓவர் லோடோடு டிப்பர் லாரிகள் போட்டி போட்டு செல்லும்போது லாரிகளிலிருந்து தவறி சாலையில் விழும், ஈர பதமுள்ள சுண்ணாம்புக்கல் மண்களை சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஆலை நிறுவனமோ அல்லது நெடுஞ்சாலை துறையோ ஒருபோதும் அகற்ற முன்வருவதில்லை. சாலையில் தேங்கியுள்ள ஈர மண்கள் மேடாகி காட்சியளிக்கிறது.


குறிப்பாக காட்டு பிரியங்கியம் முதல் அஸ்தினாபுரம் வரை சாலையில் தேங்கியுள்ள இந்த ஈர மண்கள் மழை பெய்யும் போது,மேலும் சேறும் சகதியுமாக மாற்றம் அடைந்து விடுகிறது. இதனால் இவ்வழியே இருசக்கரவாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து விடுகின்றனர் . இந்த சாலைபோக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது . மேலும் வி. கைகாட்டி முதல் வாலாஜா நகரம் வரை சாலையின் இருபுறமுள்ள வெள்ளை நிற பட்டைகளை ஈர பதமான சுண்ணாம் புக்கல் மண்களால் சேதமடைந்துள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் மழை பெய்யும் போது அஸ்தினாபுரம் முதல் காட்டு பிரிங்கியம் வரை சாலையில் தேங்கியுள்ள சுண்ணாம்புக்கல் மண் மேடுகளால் விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளது .
எனவே இதுவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மழை காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக அஸ்தினாபுரம் முதல் காட்டு பிரிங்கியம்- வரை சாலையில் வெள்ளை நிற பட்டைகளை மறைத்து தேங்கியுள்ள சுண்ணாம்புக்கல் மேடுகளை அகற்றிடவும் விபத்துகளை தடுத்திட முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




