அரியலுார் அண்ணா சிலை அருகே , கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது


கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு, பாமக மாவட்ட செயலாளர் காடுவெட்டி என் இரவி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில உழவர் பேரியக்க தலைவர் தேவதாஸ் படையாண்டவர்,பாமக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் க. திருமாவளவன்,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் தங்க .கரிகாலன்,மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் தங்க ராமசாமி,மாநில செயற்குழு உறுப்பினர் கேபி ராமதாஸ்,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சி,மாநில செயற்குழு உறுப்பினர் உட்கோட்டை குமார்,வன்னியர் சங்க மாவட்ட தலைவர் இரா. பாஸ்கர்,மாவட்ட தொழிற்சங்க தலைவர் திருஞானம்,மாநில செயற்குழு உறுப்பினர் சின்னத்தம்பி நாட்டார்,மாநிலபொதுக்குழு உறுப்பினர் மைனர்,மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் அருண் குமார், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தங்க செம்மலை வரவேற்றார்.பாமக நிறுவனர் மருத்துவர் சா . இராமதாசு வழிகாட்டுதல்படி ,கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.


சமூக நீதியை வென்றெடுக்கசாதிவாரி மக்கள் கணக்கெடுப்பினை தமிழக அரசு உடனே நடத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கோஷமிட்டனர்.
இந்நிகழ்வில்,அரியலூர் தெற்கு ஒன்றிய பாமக தலைவர் திருமுருகன்,அரியலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அறிவ ழகன்,மேற்கு ஒன்றிய தலைவர்இராசப்பன்,அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார்செட்டியார்,அரியலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன்,அரியலூர் நகர பாமகசெயலாளர் அருள்,அரியலூர் நகர வன்னியர் சங்க செயலாளர்சாத்தையா வெற்றி,ஜெயங்கொண்டம் செயலாளர் இளங்கோவன்,வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமன்,மேற்கு ஒன்றிய செயலாளர் எம்எஸ்கலியபெருமாள், த.பழூர் தெற்கு ஒன்றிய பாமக செயலாளர் குமணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வ குமார்,வடக்குஒன்றிய செயலாளர் பரமசிவம் ,மேற்கு ஒன்றிய செயலாளர் இளவரசன்,ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய பாமக செயலாளர் தினகரன் ,வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் வேள், கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் ,மாவட்டத் துணைச் செயலாளர் தங்க சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஜெயங் கொண்டம் நகர செயலாளர் பரசுராம் நன்றிகூறினார்.தொடர்ந்து மாவட்ட பாமக சார்பில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை மனு வழங்கப்பட்டது.




