பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ(எம்), சிபிஐ, விசிக ஆகிய கட்சியினர் கண்டன கோஷம் எழுப்பி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 2025 மின் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டியும்,
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்திட வேண்டியும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கைவிட வேண்டியும்,
2025 தொழிலாளர் விரோத ஷ்ரம் சக்தி நிதியை கைவிட வேண்டியும்,
மூன்று வேளாண் சட்டத்தை ரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கண்டன குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெ.ரமேஷ், சிபிஐ மாவட்ட செயலாளர் ஜெயராமன், விசிக மாவட்ட செயலாளர்கள் ரத்தினவேல், கலையரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் தோழர் V.மாரியப்பன், சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், விசிக இளம் சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.




