• Thu. Dec 4th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய பத்திரிகையாளர் பணிமனை துவக்கம்..,

கன்னியாகுமரியில் அகில இந்திய அளவிலான 8வது மாநிலங்களுக்கிடைய அறிவுஜீவி பத்திரிகையாளர் பணிமனை இந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. “முயற்சியிலிருந்து வெற்றிக்கு – நேர்மறை சிந்தனையின் மதிப்பு” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பயிலரங்கு கன்னியாகுமரியின் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. விவேகானந்த கேந்திர மக்கள் தொடர்பு அலுவலர் சுனில் ஶ்ரீராம் இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

இந்தப் பயிலரங்கினை ஹரியானா மாநில சோனிபட் ஜில்லா பத்திரிகையாளர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பத்திரிகைத்துறையின் வளர்ச்சி, தகவல் பரிமாற்றம், சமூகப் பொறுப்பு, மாநிலங்களுக்கிடைய ஒத்துழைப்பு, புதிய ஊடக சூழலில் எழும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.

பிரஸ் கிளப் நிர்வாகக் குழுவில் தலைவர் சுந்தர், துணைத் தலைவர் ராஜேஷ் காத்த்ரி,
பொதுச் செயலாளர் சோம்பால் சைணி, இணைச் செயலாளர் சுக்பீர் சைணி, பொருளாளர் ஹரீஷ், உறுப்பினர் சியாம் ஆகியோர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பயிலரங்கில் விவேகானந்த கேந்திர வளாக பொறுப்பாளர் சுனில் சிரமலூ பிரதம விருந்தினராகவும், ராமாயண தரிசன மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஹரியானா பிரஸ் கிளப் சோனிபத் தலைவர் ராஜேஷ் குமார் கதிரி, பொதுச் செயலாளர் சுக்பீர் ஸைனி ஆகியோர் கிளப்பின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் இந்தப் பயிலரங்கின் முக்கியத்துவத்தை விளக்கினர்.
“நேர்மறை சிந்தனை, நேர்மை, தொடர்ந்து முயற்சி — இதுவே பத்திரிகையாளரின் முன்னேற்றத்திற்கான முக்கிய மூலிகைகள்” என அவர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினர் கிருஷ்ணகுமார் அவர்கள், “மாநிலங்களை இணைக்கும் இத்தகைய பயிலரங்குகள் அறிவு பரிமாற்றத்துக்கு மிக முக்கியமானவை. ஹரியானா செய்தியாளர்கள் கன்னியாகுமரியில் வந்து பங்கேற்பது அவர்களின் அர்ப்பணிப்பை காட்டுகிறது,” என்று பாராட்டினார்.

பிரதம விருந்தினர் சுனில் சிரமலூ அவர்கள், “விவேகானந்தர் வலியுறுத்திய நேர்மறை சிந்தனை, தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் பத்திரிகை உலகில் நடைமுறைப் படுத்தப்படும் போது சமூகத்தில் நல்ல மாற்றங்கள் உருவாகும்,”
என்றார்.

வடஇந்தியாவின் பல்வேறு ஊடக அமைப்புகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இதில் பங்கேற்றனர். பத்திரிகைத்துறையின் தரநிலையை உயர்த்துதல், திறன் மேம்பாடு, மாநிலங்களுக்கிடைய பத்திரிகை ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்தப் பயிலரங்கு ஒரு தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.