அரியலூர் அண்ணா சிலை அருகில்,தமிழக ஆளுநர் ஆர் .என் இரவியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கி னார்.திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மு கோபால கிருஷ்ணன் ஆர்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சி சிவக்கொழுந்து ,அரியலூர் மத்திய ஒன்றிய செயலாளர் தெய்வ இளையராஜன், ,விசிக ஒன்றிய செயலாளர்கள் இரா உத்திராபதி, அ. செ .தங்கராசு காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலை வர்கள் ஆர் கர்ணன், பி.பாலகிருஷ் ணன்,அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் மாமு சிவகுமார், மதிமுகஒன்றிய செயலாளர்கள் பி சங்கர், கவிஞர் எழிலரசன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் அ .அருண் பாண்டியன், திராவிடர் கழக ஒன்றிய துணைத் தலைவர் மு மருதமுத்து திராவிடர் கழக அரியலூர் நகர தலைவர் துரை. காமராஜ், நகரச் செயலாளர் ஆட்டோ . தர்மா ,சிபிஐ ஒன்றிய செயலாளர் து.பாண்டியன் விசிக நகரச் செயலாளர் பி தாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்ட திட்ட திருத்த குழு இணை செயலாளர் சுபா .சந்திரசேகர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு . சின்னப்பா , திராவிடர் கழக தலைமை செயற் குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன்,மதிமுக மாநில விவசாய அணி செயலாளர்வாரணாசி கி இராஜேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர்க. இராமநாதன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அங்கனூர் சிவா, இரா கதிர்வாணன், விசிக மாநில துணை செயலாளர் ம.கருப்புசாமி,
தொகுதி செயலாளர் இரா மருதவாணன்,சிபிஎம் மாவட்ட செயலாளர்எம்.இளங்கோவன்,சிபிஐமாவட்டசெயலாளர்க.நடராஜன்,சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழு த. தண்டபாணி,திராவிடர் கழக காப்பாளர்கள் சி.காமராஜ், சு மணிவண்ணன். திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட துணை செயலாளர் பொன். செந்தில் குமார்,பொதுக்குழு உறுப்பினர்கள் இரத்தின. ராமச்சந்திரன், இராஜா அசோகன், திராவிடர் கழக மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர்,விவசாய அணிமாவட்ட செயலாளர்ஆ.இளவழகன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழ் நாட்டையும் தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயலும் ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து கண்டன உரை ஆற்றினர் . ஆர்ப்பாட் டத்தின் முடிவில் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் த.செந்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.








