அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனே வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையத்தின் முன்பு சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், 147 பேர்ஐ போலீசார் கைது செய்தனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

காலியாக உள்ள அரசு பணியி டங்களை உடனே நிரப்பிட வேண்டும்,சத்து உணவு ஊழியர் கள் அங்கன்வாடி ஊழியர்கள் வருவாய் கிராம ஊழியர்கள் உருபுற நூலகர்கள் எம் ஆர் பி செவிலியர் சங்கம் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சிறப்பு காலம் முறை,தொகுப்பூதியம்,மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டபூர்வமான ஓய்வூதியம் வழங்க வேண்டும்,பெண் அரசு ஊழியர் களுக்கு ஆர்எஸ்எஸ் சிறப்பு சலுகைகளை வழங்கிட வேண்டும்.
உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 147 அரசு ஊழியர்களை ,போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து,தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். முன்னதாக 12 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அண்ணா சிலை முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர்என்வேல்முருகன், மாவட்டச் செயலாளர் எம் .கே . ஷேக்தாவூத், மாவட்டபொருளாளர் ஆர்.பைரவன்,மாவட்டத்துணைத் தலைவர்கள்ராஜவேம்பு, பி ,பாக்கியம், ரெ செந்தில்நாதன், ஜி ரமேஷ்,மாவட்ட இணைச் செய லாளர் கி . காந்தி , இரா.சந்திர சேகர், கா . சின்னசாமி, ம. சிவக்குமார் , மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர் அம்பேத்கர் , மாவட்ட மகளிர் குழு அமைப்பாளர் ஜெ. சிந்தனைசெல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








