தேர்தல் வந்துவிட்டால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் பலத்தைக் காட்டுவது, அதற்காக கூட்டத்தைக் கூட்டுவது, மாநாடுகள் நடத்துவது, அறிக்கைகள் வெளியிடுவது என பல சம்பவங்கள் நடந்தேறும். ஆனால் புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் இன்று புதுக்கோட்டையில் வைத்தே புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

கட்சிக்குப் பெயர் திராவிட மக்கள் முன்னேற்ற கழகம். இவர் திடீரென்று தான் முடிவு எடுத்தாரா? நீண்டகால முடிவா என்று அவரிடம் விசாரித்த போது எனது பெயர் டாக்டர் மு.க.திருமுருகன். கடந்த 17 ஆண்டுகளாக திமுகவில் தான் இருந்தேன். கட்சிக்காக எவ்வளவோ உழைத்து இருக்கிறேன் எவ்வளவோ செலவுகள் செய்து இருக்கிறேன். ஆனாலும் கட்சியில் ஒரு சரியான அங்கீகாரம் கிடையாது. மேலும் இன்பநிதியின் பெயரில் ஒரு பாசறை அமைத்து அதை அறிவிப்பாக வெளியிட்டேன். அதற்கு காரணமும் அடுத்த இளைய தலைமுறையை இளைஞர்களை திமுகவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அதற்காக நான் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். நான் கட்சிக்காக இவ்வளவு உழைத்தாலும் எனக்கான அங்கீகாரம் திமுகவில் கிடையாது. அதனால் தான் இன்று இந்த கட்சியை தொடங்கி இருக்கிறேன்.

புதுக்கோட்டை சேர்ந்தவர் மு.க.திருமுருகன் . இவர் இன்று பகலில் புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தான் ஒரு புதிய கட்சி தொடங்கி இரு செயலாறஅதனால் தனிக் கட்சி தொடங்குவது என்று முடிவெடுத்து திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சியை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறேன். நான் புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கி இருக்கிறேன். கட்சி அறிவித்தது போல திருச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஆங்காங்கே உள்ள நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலைகள் அணிவித்து ஆங்காங்கே கட்சியை இன்று அறிமுகப் படுத்துகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போது அறிஞர் அண்ணா நாவலர் நெடுஞ்செழியன் கே ஏ மதியழகன் ஈ வி கே சம்பத் என் வி என் சோமு ஆகியோர் சேர்ந்துதான் திமுகவை தொடங்கினார்கள். அவர்கள் என்ன கொள்கையை முன்வைத்து தொடங்கினார்களோ அதே கருத்துக்களையும் கொள்கையையும் வைத்து தான் நானும் கட்சி தொடங்கி இருக்கிறேன். இது மக்களுக்கான கட்சி மக்களுக்கு சேவை செய்வதற்காக இந்த கட்சியை தொடங்கி இருக்கிறோம்.
இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் வந்த பிறகும் மக்கள் இன்னும் நிறைய பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது எங்கள் கட்சியின் முக்கிய நோக்கமாகவும் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுவதும் மக்கள் பிரச்சனைகளை அதிகாரிகள் இடத்தில் கொண்டு போய் சேர்த்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாடுபடுவது எனவும் தற்போது முடிவு செய்து நாங்கள் கட்சியை தொடங்கி இருக்கிறோம். எங்களது செயல்பாடுகள் போகப்போக தமிழ்நாடு முழுவதும் தெரியவரும் என்றார்.








