• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பல்சமய கிறிஸ்மஸ் இன்னிசை விழா..,

BySeenu

Dec 1, 2025

கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய பல்சமய இன்னிசை விழா டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் பேராலயத்தில் நடைபெற்றது.கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கோவை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ், C. S. I கோவை திருமண்டல போதகர்கள்,
E.C.C. உதவி தலைவர் Rev. Dr. கருணாகரன், T. E. L. C முன்னாள் பேராயர். REV DR.எட்வின் ஜெயக்குமார், பெந்தேகோஸ்தே சபைகளின் பிரதம பேராயர் REV. DR. டேவிட் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக முத்து சிவ ராமசாமி அடிகளார், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி முன்னாள் தலைவர் அப்துல் ஜாப்பர், கோவை குருத்துவாரா சிங் சபா தலைவர் குர்பிரீத் சிங், ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் வழக்கறிஞர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்னிசை பாடல்கள், கிறிஸ்துமஸ் பாடல்கள் கிறிஸ்து பிறப்பு நாடகம் மற்றும் நடனங்கள், திருச்சபைகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு பாராட்டி சென்றனர்.