• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

“ரோலக்ஸ்” காட்டு யானை உயிரிழப்பு..,

BySeenu

Nov 27, 2025

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மலையடிவார கிராமங்களில் ரோலக்ஸ் என்ற ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது.

இதனால் விலை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்துவதுடன் அவ்வப் போது மனிதர்களையும் தாக்கி கொள்வதாக புகார் எழுந்தது. விவசாயிகள் கோரிக்கையால், கும்கி யானை உதவியுடன் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி, டாப்ஸ்லிப்பில் உள்ள யானைகள் முகாமில் பாதுகாத்தினர். பின்னர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மந்திரி மட்டத்தில் உள்ள பொருத்தமான வாழ்விடப் பகுதியில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு விடுவிக்கப்பட்டது.

அது விடுவிக்கப்பட்ட இடம் நல்ல உணவு மற்றும் நீர் ஆதாரங்களை கொண்ட இடமாக இருந்ததாகவும், அது விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து அந்த யானை அந்தப் பகுதியில் நன்றாக மேய்ந்து தண்ணீர் அருந்தியும் வந்ததாகவும், மந்திரி மட்டம் முகாமில் இருக்கும் கண்காணிப்பு குழு யானையை நேரடியாக கண்காணித்து வீடியோக்கள் மற்றும் அறிக்கைகளை அனுப்பி உறுதிப்படுத்தியதாகவும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலையில் கண்காணிப்பு குழு யானை பற்றி புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பி இருந்ததாகவும், அந்த பகுதியில் தினமும் மழை பெய்து வருகிறது. இன்று காலை 11.45 மணிக்கு கிடைத்த ரேடியோ கலர் சிக்னல் அடிப்படையில் குழு யானையை நேரடியாக கண்காணித்து வந்ததாகவும், யானை நன்றாக மேய்ந்து கொண்டு இருந்த அப்போது சுமார் 2 மணி அளவில் யானை தண்ணீர் குடிக்க அருகில் உள்ள ஒரு சிறிய நீர் நிலைக்கு சென்று உள்ளதாகவும், அப்பொழுது யானை தரையில் வழுக்கி கீழே விழுந்ததை கண்காணிப்பு குழுவினரும் பார்த்து உள்ளதாக தெரிவித்த வனத்துறை அதிகாரிகள். அதன் அருகில் செல்லாமல் சிறிது நேரம் காத்து இருந்ததாகவும், ஆனால் அந்த யானை எழுந்து இருக்கவில்லை எனவே அவர்கள் மெதுவாக அருகில் சென்று பார்த்து உள்ளனர். பின்னர் யானை இறந்து விட்டதை உறுதி செய்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனை அடுத்து நாளை வன கால்நடை மருத்துவர் வெண்ணிலா, கோவை உதவி கால்நடை மருத்துவர் கலைவாணன், மதுரை மற்றும் வால்பாறை சேர்ந்த ஒரு கால்நடை மருத்துவர் ஆகியோர் விலங்கு நல ஆர்வலர்கள் முன்னிலையில் பிரேத பரிசேதனை நடத்தப்பட உள்ளதாகவும், மேலும் அதில் வனவிலங்கு காப்பாளர் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி வேணும் பிரசாத், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்து உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில் வனத்துறை அதிகாரிகள் ராகுல், இயக்குனர் டி.என்.யூ.சி.சி.பி மற்றும் வண்டலூர் பூங்காவை சேர்ந்த வன கால்நடை மருத்துவர் டாக்டர் ஸ்ரீதர் ஆகியோர் யானை விடப்பட்ட இடம் மற்றும் பதிவுகளை கண்காணித்து ரேடியோ கலர் ஜி.பி.எஸ் தரவு மற்றும் சிகிச்சை வரலாற்றை ஆய்வு செய்து இறப்புக்கான காரணங்கள் கண்டறியுமாறு கேட்டு உள்ளதாகவும், அவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.