• Mon. Jan 26th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

பழங்குடியின இளைஞர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு..,

BySeenu

Nov 24, 2025

அரசு உணவகத்தை நடத்துவதற்கு கால நீட்டிப்பு பெற்று தர வேண்டும் என பழங்குடியின இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். பழங்குடியின மக்கள் ஆவார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் அரசால் வழங்கப்படும் உணவகத்தை நடத்தி வருகிறார். இவரது உணவகத்தில் பழங்குடியின மக்கள் பணிபுரிந்து வாழ்வதாரம் ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென வனத்துறையினர் அந்த உணவகத்தை புதுப்பிக்க வேண்டும் என கூறி காலி செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாகவும் டாப்சிலிப் பகுதி சுற்றுலா பகுதி என்பதால் டிசம்பர் ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களில் புத்தாண்டு, பொங்கல் விடுமுறைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால் வாழ்வாதாரம் பெருகும் எனவே அந்த புதுப்பிக்கும் பணிகளை பிப்ரவரி மாதத்திற்கு மேல் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்யும்படியும் இந்த இரண்டு மாதங்கள் உணவகத்தை நடத்துவதற்கு கால நீடிப்பு பெற்று தருமாறு கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடமும் பழங்குடியினர் அலுவலகத்திலும் மனு அளித்தார்.

இது குறித்து பேசிய அவர், தான் தற்பொழுது சுற்றுலா பயணிகளுக்கும் அங்குள்ள மலைவாழ் மக்களுக்கும் பயன்படும் வகையில் ஜீப் வாகனத்தை வாங்கி இருப்பதாகவும் அதற்கு உரிய அனுமதி அளிக்காமல் வனத்துறையினர் இழுத்தெடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் எந்த ஒரு முன்னறிவிப்பும் என்று அந்த உணவகத்தை மூட வேண்டும் என்று வனத்துறையினர் கூறுவதாகவும் டாப்ஸ்லிப் பகுதி சுற்றுலா பகுதி என்பதால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் தான் அதிக அளவு மக்கள் கூட்டம் வரும் எனவே அது வரை நடத்திக் கொள்ள அனுமதி வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதே சமயம் வனத்துறையினர் உணவு சமைக்க மாற்று இடம் தருவதாக கூறுகிறார்கள் ஆனால் அந்த இடம் சுகாதாரமற்ற முறையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார். அந்த உணவகத்தில் பழங்குடியின குடும்பங்களும் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களுக்கு வாழ்வாதாரமே அந்த உணவகம் தான் எனவே இரண்டு மாதங்கள் மட்டும் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.

தன்னை அந்த பகுதியில் சுற்றுலா வாகனம் ஓட்டக்கூடாது என்று உரிய விளக்கமும் அளிக்காமல் கூறுவதாகவும் தற்பொழுது அந்த பகுதியில் வனத்துறையின் இரண்டு வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் கூடுதலாக தனது வாகனமும் இயக்கப்பட்டால் பழங்குடியின மக்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.