• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நகரப்பேருந்து சேவை துவக்க விழா..,

ByT. Balasubramaniyam

Nov 22, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி , தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் பேருந்து நிலையத்தில், நகரப்பேருந்து குறியீட்டு எண்.015A அரியலூரிலிருந்து கீழப்பழுர், கோவிலூர் வழியாக செட்டிக் குழிக்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.022A அரியலூரிலிருந்து வி.கைகாட்டி, சுண்டக்குடி வழியாக ஏலாக்குறிச்சிக்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.017A அரியலூரி லிருந்து கீழப்பழுவூர், இலந்தை க்கூடம் வழியாக செம்பயிக் குடிக்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.020A அரியலூரிலிருந்து திம்மூர், கொளக்காநத்தம் வழியாக ஆலத்தூர் கேட் பகுதிகளுக்கும் இயங்கும் வகையில் ஏற்கனவே இயங்கி வந்த பழைய பேருந்து களுக்கு பதிலாக 04 பதிய BS-VI நகரப்பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி .சிவசங்கர்,மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்ன ப்பா முன்னிலையில் கொடிய சைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செந்துறை பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் நகரப்பேருந்து குறியீட்டு எண்.012A அரியலூரிலிருந்து செந்துறை, பொன்பரப்பி வழியாக மத்து மடக்கி, நகரப்பேருந்து குறியீட்டு எண்.016A அரியலூரிலிருந்து கலியப்பெருமாள் கோவில், அயன் ஆத்தூர் வழியாக ஆனந்த வாடிக்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.018A அரியலூரி லிருந்து துங்கபுரம் வழியாக செந்துறை,ஜெயங்கொண்டத்திற்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.023A அரியலூரிலிருந்து கலியப்பெருமாள் கோவில், கிளிமங்கலம் வழியாக இரும்புலிக்குறிச்சிக்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.
010A ஜெயங்கொண்டத்திலிருந்து உடையார்பாளையம், இரும்புலிக் குறிச்சி வழியாக ஆனந்த வாடிக்கும் ஏற்கனவே இயங்கி வந்த பழைய பேருந்து களுக்கு பதிலாக 05 பதிய BS-VI நகரப்பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் , தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்ப) லிட்,கும்பகோணம் நிர்வாக இயக்குநர் தசரதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் பொது மேலாளர் டி.சதீஸ் குமார்,ஒன்றிய திமுக செய லாளர்கள்தெய்வ இளைய ராஜன், அன்பழகன், அறிவழகன், ஆர் கலியபெருமாள் பூ செல்வராஜ், வி எழில் மாறன், பொன் செல்வம், அரியலூர் நகர திமுக செயலாளர் இரா முருகேசன், நகர் மன்ற தலைவர் சாந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் இரா பாலு, சுமதி ,நகர் மன்ற துணைத் தலைவர் தங்க கலியமூர்த்தி, தொழிற்சங்க பிரதிநிதிகள் பி.வி அன்பழகன், கனகராஜ் , ஓட்டுநர்கள், நடத்துநர் கள் மற்றும் இதர அரசு அலுவலர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.