கோவையில் பாதுகாப்பான நிலங்களை வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் அலெர்ட் கோவை” எனும் பிரச்சாரத்தை துவங்கி உள்ளது.

முன்னதாக அலெர்ட் கோவை பிரச்சாரத்தை கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், கோவை மேயர் ரங்கநாயகி ஆகியோர் துவக்கி வைத்தனர்..
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..
இதில் செய்தியாளர்களிடம் பேசிய அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் பேசினார்..
அப்போது பேசிய அவர்,ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து பொது மக்கள் பயன் பெறும் விதமாக பல புதிய திட்டங்களை அறிமுக படுத்தி வருவதாக கூறிய அவர்,அந்த வரிசையில் அலெர்ட் கோவை எனும் பிரச்சாரத்தை துவக்கி உள்ளதாக தெரிவித்தார்..
காலி மனை அல்லது வீடு வாங்குபவர்கள் அரசு வழிகாட்டுதல் முறைகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அலெர்ட் கோவை வழியாக ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு இலவசமாக தகவல்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்..
இந்த முயற்சி கோவையில் முதன் முறையாக துவக்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர்,விரைவில் தமிழகம் முழுவதும் இந்த சேவையை கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்..

பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, நிலம் மற்றும் அடுக்கு மாடி வீடுகள் வாங்குவதில் ரேரா வழிகாட்டுதல் குறித்து விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி உள்ளதாக கூறினார்..
இன்னும் சில தினங்களில் இதற்கென தனியாக இரண்டு மையங்கள் அமைத்து காலி மனை மற்றும் வீடு வாங்குபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை இலவசமாக வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
எந்தவொரு சொத்திலும் முதலீடு செய்வதற்கு முன் வீடு வாங்குபவர்கள் ரேரா பதிவைச் சரிபார்க்க வலியுறுத்துவதும், தவறான கூற்றுக்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும், கோவையில் வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தையில் அதிக வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதே அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாடு துணை தலைவர் கிங்ஸ்டன்,இயக்குனர் செந்தில் குமார்,சி.ஆர்.ஓ. சிவக்குமார், விற்பனை பிரிவு துணை தலைவர் ஸ்ரீனிவாசன்,ஆகியோர் உடனிருந்தனர்..






; ?>)
; ?>)
; ?>)
