தேசிய கார் பந்தயம் போட்டியில் பெங்களூரு வீரர் கோப்பையை தட்டிச் சென்றார். கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே”யில் தேசிய அளவிலான கார் பந்தயம் 2 நாட்கள் நடைபெற்றது.

இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, டெல்லி, மராட்டியம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மிக முக்கிய பந்தயமான எல்.பி.ஜி. பார்முலா 4 பந்தயத்தில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வீரர் துருவ் கோஸ்சுவாமி 19 நிமிடம், 58 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார்.
ருகன் ஆல்வா 2-ம் இடம், தில்ஜித் 3-ம் இடம் பிடித்தனர்.

நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் புவன் பானு முதலிடம், பொள்ளாச்சியை சேர்ந்த லோகித்லிங்கேஷ் ரவி 2-ம் இடம், அபி ஜித்3-ம் இடம் பிடித்தனர்.
காண்டினென்டல் ஜி.டி. கோப்பைக்கான போட்டியில் ஜார்கிங் வர்ஷா முதலிடம், பிராயன் நிகோலஸ் 2-ம் இடம், சரண்குமார் 3-ம் இடம் பிடித்தனர். அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வீரர்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.







; ?>)
; ?>)
; ?>)