• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஒரு ஏக்கர் கோயில் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார்..,

ByS. SRIDHAR

Nov 15, 2025

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் சிறுகால சந்தி என்ற தனியார் அறக்கட்டளை உள்ளது. இந்த அறக்கட்டளையின் அறங்காவலராக சிதம்பரம் என்பவரது மகன் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த துரைமுருகன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தான் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான ஆவுடையார் கோயிலில் உள்ள சுமார் 20 லட்சம் மதிப்புடைய ஒரு ஏக்கர் நிலத்தை கடந்த 2012ம் ஆண்டு ஏற்கனவே அந்த அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்த துரைமுருகனின் தந்தை சிதம்பரம் எழுதிக் கொடுத்ததை போல் ஆள்மாறாட்டம் செய்து போலியான கையொப்பமிட்டு ஆவணங்களை தயாரித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நேமத்தான்பட்டி கிராமம் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் அந்த சொத்தை அபகரிக்க வேண்டும் என்று செயல்பட்டதாக கடந்த 2024 டிசம்பர் மாதம் துரைமுருகனுக்கு தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு புகார் கொடுத்திருந்த நிலையில் நிலம் தொடர்பான வழக்கு என்பதால் நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவு பெற்று வாருங்கள் என்று காவல்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிலத்துக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்திருந்த நிலையில் நீதிமன்றம் இதுகுறித்து மாவட்ட காவல்துறை உரிய விசாரணை செய்து முகாம்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு 2 போலீசார் விசாரணை நடத்தியதில் சம்பந்தப்பட்ட தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஒரு ஏக்கர் நிலத்தை நேமத்தான்பட்டி சிதம்பரம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றது தெரிய வந்ததை தொடர்ந்து சிதம்பரம் மீது நான்கு பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்தான் இன்று சம்பந்தப்பட்ட தனியார் அறக்கட்டளையின் அறங்காவலர் துரைமுருகன் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று ஆள் மாறாட்டம் செய்து போலி கையொப்பமிட்டு ஆவணங்களை தயாரித்து அறக்கட்டளை சொத்தை அபகரிக்க முயன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சிதம்பரம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் சிதம்பரம் இது போன்று வேறு ஏதேனும் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளாரா? இதற்கு உடந்தையாக யாரேனும் இருக்கிறார்களா என்பதையும் விசாரிக்க வலியுறுத்தினர்.