மதுரை செல்ல சென்னை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வை. கோ, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற தனது நெருங்கிய நண்பர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த வைகோ, “பீகாரில் கிடைத்த வெற்றி போல, தமிழகத்திலும் வெற்றி பெறலாம் என்று எண்ணுபவர்கள் தவறாக எண்ணுகின்றனர். தமிழகத்தில் மனப்பால் குடிக்கும் கட்சிகள் எந்த சூழலிலும் வெற்றி பெற முடியாது,” என கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் காந்தி தேர்தலில் முழுமையாக ஈடுபட்டு செயல்பட்டார், இதுபோன்ற செயல்பாடு தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் அவசர திருத்தம் குறித்து,
“இது மிகப்பெரிய போர்ஜரி,” என்று கூறிய வைகோ, பின்னர் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.








