சென்னை நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், ஐ.சி.எல் ஃபின்கார்ப் நிறுவனம் தனது புதிய பாதுகாப்பான திரும்பப் பெறக்கூடிய மற்றும் மாற்ற முடியாத கடன்பத்திரங்கள் (NCD) பொது வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வெளியீடு வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கிக் கொண்டு நவம்பர் 28ஆம் தேதி வரை முதலீட்டாளர்களுக்கு திறந்திருக்க உள்ளது. ஒவ்வொரு NCD-க்கும் முகவிலை ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
13, 24, 36, 60 மற்றும் 70 மாதங்கள் போன்ற பல்வேறு கால அளவுகளில், மாதாந்திரம், வருடாந்திரம் மற்றும் தொகுப்பு வட்டி உள்ளிட்ட மூன்று வகை வட்டி முறைகளில் இந்த பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதில் வட்டி விகிதம் 10.50% முதல் 12.62% வரை இருக்கும் என்றும், இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு வாய்ப்பாக அமையும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் மற்றும் வழக்கறிஞருமான அனில்குமார் கூறுகையில், இந்த வெளியீட்டின் மூலம் பெறப்படும் நிதி, ஐ.சி.எல் ஃபின்கார்ப் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து, வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்களுக்கான சேவைகளின் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.
மேலும், தற்போது நிறுவனம் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் வலுவாக செயல்பட்டு வருவதாகவும், அனைத்து செயல்பாடுகளும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்குள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.







; ?>)
; ?>)
; ?>)