மதுரை விமான நிலையம் அருகே பூந்தோட்டம் அன்பழகன் நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசிக்கின்றனர்.

மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் விவசாய நிலங்களும் உள்ளது.
இப்பகுதியில் நடுவே பழமை வாய்ந்த விவசாய கிணறு ஒன்று இப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.
இதனைப் பகுதி மக்கள் மழை நீர் சேகரிப்பு மற்றும் விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த சமூகவிரோதிகள் சிலர் இரசாயன கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் அடங்கிய குப்பைகளை நேற்று மாலை கிணற்றில் கொட்டினர்.
இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால் அவர்களோ மேலும் சில லாரிகளில் குப்பைகளை கொண்டு வந்து கிணற்றை மூடும் நோக்கில் கழிவுகளை கொட்டினர்.

அதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல் துறை மற்றும் மதுரை மாநகராட்சி நூறாவது வார்டு அதிகாரிடம் புகார் செய்தனர் அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் பூந்தோட்ட நகரில் உள்ள கிணற்றை தூய்மைப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் .




