முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 25ஆம் தேதி காலை 10:40 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவின் போது தினமும் சுப்பிரமணியசாமி தெய்வானை காலையில் தங்கச் சப்பரம் விடையாத்தி சப்பரத்திலும், மாலை நேரங்களில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், வெள்ளி ஆட்டுகிடாய், தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் எழுந்தருளி வீதி உலாவரும்.

இதில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் டிசம்பர் 2 ஆம் தேதி பட்டாபிஷேகமும், 3ஆம் தேதி காலையில் சிறிய வைரத் தேரோட்டம், மாலையில் மலை மேல் கார்த்திகை மாக தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது, இறுதியாக 4 ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.







; ?>)
; ?>)
; ?>)