விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நாய் ஒன்று கடந்த ஒரு வாரத்திற்கு முன் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு இன்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு வலையின் உதவியோடு நாய் பத்திரமாக மீட்கப்பட்டது.

இதையடுத்து உடல் அசைவற்ற நிலையில் இருந்த நாய்க்கு முதலுதவிச சிகிச்சை (CPR) அளித்து உயிரை காப்பாற்றினர். ஆனால் 1 வாரமாக கிணற்றுக்குள் நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால் அதிக உடல் நடுக்கத்துடன் சோர்வாக காணப்பட்டதால் அருகில் இருந்த இலை தலைகளை தீயிட்டு எரித்து நாய்க்கு உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்தனர். இதனால் நாய் இயல்பு நிலைக்கு வந்தது. தீயணைப்பு படையினரின் மனிதநேயமிக்க செயலை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.












; ?>)
; ?>)
; ?>)