தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் இடங்களில் குமரிமாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆரல்வாய்மொழி கணவாய் மிக முக்கியமானது.
ஆரல்வாய்மொழி,முப்பந்தல், பழவூர ஆகிய பகுதிகளில் 1500_க்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள், பணவசதி படைத்தவர்கள், இந்த பகுதியில் காற்றாலைகள் தொழிலில் அதிகம் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆரல்வாய் மொழியை அடுத்த முப்பந்தலில் தனியாருக்கு சொந்தமான ஒரு காற்றாலை நேற்று மாலை திடீரென அதிகளவில் கரும்புகை மை வெளிவந்தது. காற்றாலை மை இயக்கும் கருவி எரிய தொடங்கியது.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
காற்றாலை தீப்பிடித்து எரிந்ததால் அதை பார்ப்பதற்கு பொதுமக்கள் திரண்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.











; ?>)
; ?>)
; ?>)