திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டாத்தி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராசு, சகுந்தலா, கலைச்செல்வி, திருப்பதி, இளங்கோவன், உள்ளிட்ட 6க்கு மேற்பட்டோர் மீது கதண்டுகள் கடித்து நம்பிவயல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டி பாலசுந்தரி மீது திடீரென கதண்டு வண்டுகள் துரத்தி துரத்தி கடித்ததில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காட்டாத்தியில் சாலை ஓரத்தில் உள்ள மரங்களில் பெரிய அளவில் கதண்டு வண்டுகள் கூடு கட்டி உள்ளதால் திருவோணத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வாகன ஓட்டிகள் மீது திடீரென காலை மாலை நேரங்களில் கதண்டு வண்டுகள் துரத்தி துரத்தி கடிப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் நேற்று மாலை கதண்டு வண்டுகள் கடித்து காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கல்யாணசுந்தரம், என்பவருக்கு சொந்தமான 20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு ஆடுகள் உயிரிழந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீயணைப்புத் துறையினர் உடனடியாக கூடு கட்டி உள்ள கதண்டு வண்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என காட்டாத்தி பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.











; ?>)
; ?>)
; ?>)